தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி வருகையின்போது மீண்டும் மின்வெட்டு: சர்ச்சை

மதுரை, அக்டோபர் 31: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தபோது மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்குள் சென்றுவர கோவிலின் கிழக்கு வாயில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சாமி தரிசனம் செய்த பின் வெளியே வந்தபோது அடுத்தடுத்து இரண்டு முறை கோவில் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. துணை குடியரசு தலைவரின் பாதுகாப்பு வாகனங்கள் கிழக்கு வாயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் அரங்காவலர் குழு தலைவர் திருமதி ருக்மணி பழனிவேல்ராஜன், மின்தட்டுப்பாடு காரணமாக துணை குடியரசு தலைவரின் வருகையின் போது ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கிடையே மின்தடை குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள அமைச்சர் திரு நிர்மல் குமார், துணை குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு பிற்பகல் 3:30 மணி முதல் கோவிலுக்கு முழுமையாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், தரிசனத்தை முடித்துவிட்டு அவர் வெளியே வந்தபோது மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் வினியோகம் தடைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் மின்சாரத்திலிருந்து மின்சார வாரியத்தின் வினியோகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

English summary: A power cut occurred twice in a row at the Madurai Meenakshi Amman temple as Vice President C.P. Radhakrishnan came out after darshan, causing a stir among security officials. Temple board chairperson Rukmani Palanivel Rajan said power was being supplied by generator during the visit, while minister Nirmal Kumar said on X that the generator supply since 3.30 pm was cut by a fault in the control room and switched to the electricity board supply within two minutes.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன