தேசியம்

ஐரோப்பிய நாடுகள் மீது போர் நடத்த தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் புத்தின் பகிரங்க எச்சரிக்கை

மாஸ்கோ, அக்டோபர் 31: ஐரோப்பிய நாடுகள் மீது போர் நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புத்தின் பகிரங்கமாக எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா 2022ஆம் ஆண்டு தாக்குதலைத் தொடங்கியது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டிற்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை அளித்து வருகின்றன. மறுபுறம் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து அந்நாட்டின் 175 பில்லியன் சொத்துக்களை ஐரோப்பிய நாடுகள் முடக்கியுள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுடன் போரிட ரஷ்யா தயாராக இருப்பதாக புத்தின் தெரிவித்துள்ளார். போர் நடத்த தாங்கள் விரும்பவில்லை என்றும், அதே சமயம் எல்லை மீறினால் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். மேலும், பால்டிக் கடலில் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த புத்தின், இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் ஹோர்மூஸ் நீரிணை முடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பை பிரதிபலிக்கும் என்று கூறினார்.

English summary: Russian President Vladimir Putin warned publicly that Russia is ready for war with European countries if needed, saying Russia does not want war but will respond firmly if lines are crossed. The article notes European countries support Ukraine and have frozen Russian assets worth 175 billion, and says Putin condemned curbs on shipping in the Baltic Sea.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன