புதுச்சேரி

புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறையில் 28 பேருக்கு அரசு பணி: நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி, அக். 17: புதுச்சேரி அரசில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் பணிகளை முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் காலியாக இருந்த பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இளநிலை நூலக உதவியாளர் பணியிடங்கள் 26, காட்சியக உதவியாளர் பணியிடம் ஒன்று, ஓவியர் பணியிடம் ஒன்று என மொத்தம் 28 பணியிடங்களுக்கு தேர்வான பயனாளிகளுக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் என்.ரங்கசாமி கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட 28 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முறைப்படி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அரசு துறைகளில் நிலவும் காலி பணியிடங்களை விரைந்து நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன