புதுச்சேரி
பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் கண்டனம்
புதுச்சேரி, அக்டோபர் 27: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தந்தை குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாக கூறப்படும் கருத்துகளுக்கு புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என அவர் தெரிவித்தார். மேலும், இது போன்ற பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்றால் புதுச்சேரி முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.


