புதுச்சேரி

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை ஒட்டி ஆளுநர் கைலாஷ்நாதன் மலர்தூவி மரியாதை

புதுச்சேரி, நவம்பர் 1: தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை ஒட்டி புதுச்சேரி மக்கள் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஆளுநர் கைலாஷ்நாதன் வாசிக்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில் துணைநிலை ஆளுநரின் செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன