புதுச்சேரி

புதுச்சேரியில் நில அபகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி மனு

புதுச்சேரி, அக்டோபர் 28: புதுச்சேரி வினோபாநகர் மாரியம்மன் கோயில் வீதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் லாரன்ஸ் மேரி என்பவரது வீட்டை வலுக்கட்டாயமாக காலி செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கவர்னர் அலுவலகத்திலும் முதலமைச்சரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இன்பவேணி ஆரோக்கியதாஸ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி இந்த இடத்தை வாங்கியதாகக் கூறப்படும் நிலையில், அங்கு வசித்து வரும் லாரன்ஸ் மேரிக்கு மிரட்டல் விடுப்பது, மின்சாரத்தை துண்டிப்பது போன்ற பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லாரன்ஸ் மேரியை தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டி சாவியை எடுத்துச் சென்றதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவல்துறையினர் எதிர்தரப்பினருக்கு சாதகமாக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த லாரன்ஸ் மேரி மற்றும் அவரது உறவினர்கள், எதிர்தரப்பிலிருந்து அதிக அழுத்தங்கள் வருவதாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்தனர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் வசித்து வரும் இடத்தை தவறான ஆவணங்களைக் கொண்டு வாங்கியுள்ளதாகக் கூறி தங்களை காலி செய்யச் சொல்வதாகவும், தங்களது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary: A widow, Lawrence Mary, of Vinoba Nagar in Puducherry and her relatives petitioned the Lieutenant Governor’s office and the Chief Minister over an alleged attempt to forcibly evict her from her home. They alleged that a person who reportedly bought the property without proper documents has threatened her, cut off electricity, and locked her out, and that police act in favour of the other side. The family, who say they have lived there for over 35 years, asked for protection of their lives and property.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன