புதுச்சேரி

காட்டேரிக்குப்பம் பள்ளியில் 350 அறிவியல் படைப்புகளுடன் பிரம்மாண்டமான கண்காட்சி நடைபெற்றது

புதுச்சேரி, அக்டோபர் 28: காட்டேரிக்குப்பம் அக்னி வித்யா கேந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் மாணவர்களின் 350 அறிவியல் படைப்புகள் இடம்பெற்ற பிரம்மாண்டமான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனையை வளர்க்கும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, சூரிய ஆற்றல், விண்வெளி அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளையும் மாதிரிகளையும் காட்சிப்படுத்தியதுடன், அவற்றின் செயல்பாடுகளையும் அறிவியல் கோட்பாடுகளையும் விளக்கினர்.

இக்கண்காட்சியை புதுவை சுயநிதி கல்வி நிறுவனங்களின் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜானகிராமன், செயலாளர் சந்தானம், பொருளாளர் மோகன்தாஸ் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பார்வையிட்டனர். பள்ளி நிர்வாகி பாஸ்கர் மற்றும் முதல்வர் டாக்டர் வனிதா பாஸ்கர் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்காைட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன