புதுச்சேரி

புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா: முதல்வர் ரங்கசாமி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்!

புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கில் ராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 27-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, அமைச்சர் ஏ.நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினர்.

இவ்விழாவில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக சபாநாயகருமான அ.அன்பழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, முதலமைச்சர் மற்றும் அமைச்சருடன் இணைந்து பட்டங்களை வழங்கினார். கால்நடை மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.

கால்நடை மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கிராமப்புற பொருளாதாரம் மற்றும் விலங்கினப் பராமரிப்பிற்கு இளம் மருத்துவர்கள் பங்காற்ற வேண்டும் என வாழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள், மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

English summary: At the 27th convocation of the Rajiv Gandhi veterinary education and research institute at Kamban Kalaiarangam, Puducherry, Chief Minister N. Rangasamy and Minister A. Namassivayam presented degrees to graduates. Uppalam MLA and interim Speaker A. Anbalagan took part as a special guest. Degrees and special medals were given, young veterinarians were urged to contribute to the rural economy and animal care, and professors, officials, students and parents attended.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன