உப்பனாறு வாய்க்கால் பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என எம்.எல்.ஏ நேரு எச்சரிக்கை
புதுச்சேரி, அக்டோபர் 26: புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் உப்பனாறு வாய்க்காலில் மழைநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், உருளையார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.
இது குறித்து உருளையார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு கூறுகையில், உப்பனாறு வாய்க்காலில் சாலை அமைக்கும் பணி 16 ஆண்டுகளாக நீடிப்பதுடன், வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள கற்கள் மற்றும் மணலால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், வாய்க்காலில் உள்ள கற்கள் மற்றும் மணலை அகற்றி சாலை அமைக்கும் பணியı விரைந்து முடிக்க முதல்வர், துறை அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.


