புதுச்சேரி

“நீங்கள் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல!”: நேரில் ஆஜராவதில் விலக்கு கோரிய அமைச்சர் மரியவில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுச்சேரி: நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்த அமைச்சர் மரியவில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “நீங்கள் ஒன்றும் இங்கிலாந்தின் அரசர் அல்ல; ஆஜராக முடியாது எனக் கூற முடியாது” என்று நீதிபதி விசாரணையின் போது காட்டமாகத் தெரிவித்தார்.

புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் மரியவில்சன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, அமைச்சரின் கோரிக்கையைக் கடுமையாக நிராகரித்தார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, “அமைச்சர் மரியவில்சன் ஒன்றும் இங்கிலாந்தின் அரசர் கிடையாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் முறையாக ஆஜரானவர், தற்போது அமைச்சர் பதவிக்கு வந்த பிறகு ஆஜராக மாட்டேன் என எப்படிக் கூற முடியும்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி எச்சரித்தார். அமைச்சருக்கு நீதிமன்றம் விடுத்த இந்த கண்டனம் புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary: A Puducherry court judge rejected a petition by Minister Mariavilson seeking exemption from appearing in person in a pending case, according to the report. The judge is reported to have said that the minister is not the King of England and that the law is the same for everyone, asking how he could refuse to appear after having appeared properly before becoming a minister. The report says the court’s remarks have caused a stir in Puducherry politics.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன