புதுச்சேரி

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் சுற்றுலா படகு சவாரிக்கு அதிரடி தடை – சுற்றுலாத்துறை உத்தரவு!

புதுச்சேரி, அக். 26:

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில் சுற்றுலா படகு சவாரிகள் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிக தடை விதித்து புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குநர் கே. முரளிதரன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் புயல் சின்னம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, புதுச்சேரி பகுதியைச் சார்ந்த சுற்றுலாப் படகுசவாரி மற்றும் சாகச நீர் விளையாட்டு உரிமையாளர்கள் (Puducherry Water Sports & Adventure Sports Operators) மறு அறிவிப்பு வரும் வரை எவ்வித சுற்றுலாப் படகு சவாரிகளையும் இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், சுற்றுலா படகு உரிமையாளர்கள் அனைவரும் தங்களது படகுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கடலோரப் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களில் பத்திரமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த உத்தரவை மீறி படகுகளை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு உத்தரவின் நகல்கள் புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர், துறைமுகத் துறை இயக்குநர், இந்திய கடலோரக் காவல்படை (Coast Guard) பிரிவு மற்றும் புதுச்சேரி கடலோரக் காவல் படை உள்ளிட்ட முக்கிய துறைகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன