புதுச்சேரி

முத்தியார்பேட்டை காராமணிக்குப்பம் சித்தர் பீடத்தில் நடைபெற்ற அண்ணாபிஷேக விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு

புதுச்சேரி, அக்டோபர் 27: முத்தியார்பேட்டை காராமணிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீ சக்திவேல் பரமானந்த குருக்கள் சித்தர் பீடத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி அண்ணாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் என். ரங்கசாமி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

இதையொட்டி மூலவருக்கு 108 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து லிங்க வடிவில் அருள்வாழிக்கும் பரமானந்த குருக்கள் சித்தருக்கு அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அண்ணாபிஷேகம் நடத்தப்பட்டது. காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட சித்தர் பீடத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் அரசு கொரடா ஏ.கே.டி. ஆறுமுகம், முன்னாள் சபாநாயகர் ஏம்பளம் செல்வம், காங்கிரஸ் பிரமுகர் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் மனோகரன் தலைமையில் சுமார் 2000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், காய்கறிகள் மற்றும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

English summary: An Annabhishekam festival was held on the Aippasi full-moon day at the Sri Sakthivel Paramananda Gurukkal Siddhar Peedam in Karamanikuppam, Puducherry, and Chief Minister N. Rangasamy attended and offered prayers. The deity was decorated with cooked rice, vegetables and fruits after an abhishekam with 108 tender coconuts. Around 2,000 devotees were served food under temple trust chairman Manoharan.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன