புதுச்சேரி

வில்லியனூரைச் சேர்ந்த 2½ வயது சிறுமி அசத்தல்: ஆங்கில எழுத்துக்கள், 100-க்கும் மேற்பட்ட அட்டைகளை அடையாளம் கண்டு உலக சாதனை!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி யாஷ்வி, அபார நினைவாற்றலால் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி யாஷ்வி, மிகச் சிறிய வயதிலேயே வியக்கத்தக்க நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனைக் கொண்டுள்ளார். இவர் ஆங்கில மொழியின் 26 எழுத்துக்களை வரிசையாகக் கூறியதுடன், ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய வார்த்தைகளையும் பிழையின்றி மழலை மொழியில் சரளமாக உச்சரித்துக் காட்டியுள்ளார்.

மேலும், விலங்குகள், பறவைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட விரைவு அட்டைகளை (Flashcards) மிகக் குறுகிய நேரத்தில் துல்லியமாக அடையாளம் கண்டு சாதனை படைத்துள்ளார். சிறுமியின் இந்த அபார அறிவாற்றல் மற்றும் கவனிக்கும் திறனைப் பாராட்டி, உலக சாதனைப் புத்தகம் (World Record) அவரது சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

இளம் வயதிலேயே சாதனை படைத்துள்ள சிறுமி யாஷ்வியின் இந்த சாதனை புதுச்சேரி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. சாதனை படைத்த சிறுமிக்கு கல்வி ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் தங்கள் வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன