புதுச்சேரி

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு

புதுச்சேரி, அக்டோபர் 25: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் சட்டப்பேரவையில் நடைபெற்றது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் பொதுப்பணித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பல்வேறு தீர்மானங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளின் நிலை, கள ஆய்வுகள், தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் வடிவமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து திட்ட அறிக்கைகளை உரிய காலத்திற்குள் தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வடிவமைப்பு வரைபடங்களை ஆலோசகர்கள் அமைச்சரிடம் சமரிப்பித்து விளக்கினர்.

இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா, துறைமுகத்துறை செயலர் சுரேந்திரன், தலைமை பொறியாளர் வீரசெல்வம், இயக்குனர்கள் மோகன் முரளி மற்றும் துறை அதிகாரிகள், ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன