புதுச்சேரி

பள்ளி அங்கீகார மோசடி புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது என வெளியான செய்தி அறிக்கை பரபரப்பு

சென்னை, 26/10/2026: தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியீட்டு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து பண வசூலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகியோர் முன்னதாகவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோருக்குச் சொந்தமான சென்னை, திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரை பகுதியில் வைத்து அன்பில் மகேஸ் பொய்யாமொழியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீவிர விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், இவ்வழக்கு தொடர்பாக மேலும் பலரிடம் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன