புதுச்சேரி
காரைக்காலில் பேட்டரி ஆட்டோ விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு ஓட்டுநர்கள் போராட்டம்
காரைக்கால், அக்டோபர் 25: காரைக்கால் மாவட்டம் அம்பாள் சத்திரம் பகுதியில் உள்ள மகேந்திரா இ ஆட்டோ விற்பனை நிலையத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் இ ஆட்டோக்களை சர்வீஸ் செய்வதற்கு போதிய தொழில்நுட்ப வல்லுநர்கள், உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்கள் இல்லை என்று ஓட்டுநர்கள் குற்றம் சாட்டினர். இதனால் பழுதுகளை சரி செய்ய புதுச்சேரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், இதனால் கூடுதல் போக்குவரத்து செலவு ஏற்பட்டு பொருளாதார சுமை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். காரைக்காலிலேயே முறையான சர்வீஸ் மற்றும் பழுது நீக்கும் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

