புதுச்சேரி

புதுச்சேரி பள்ளியில் வாய் சுகாதாரம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்: 116 மாணவர்கள் பங்கேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் (NTCP) சார்பில், ‘தி ஸ்டடி லெக்கோல் இன்டர்நேஷனல்’ (The Study L’école Internationale) பள்ளியில் வாய் சுகாதாரம் மற்றும் புகையிலை எதிர்ப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு முகாமில் அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் 116 மாணவ, மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதில் புகையிலைப் பயன்பாட்டினால் உடலுக்கும் பற்களுக்கும் ஏற்படும் கடுமையான தீமைகள் குறித்தும், இளம் வயதிலிருந்தே வாய் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதன் அவசியம் குறித்தும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரக் குழுவினர் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், பல் மாதிரிகள் (Dental Models) மூலம் சரியான முறையில் பற்களை எவ்வாறு துலக்க வேண்டும் என்ற செயல்முறை விளக்கம் மாணவர்களுக்குச் செய்து காட்டப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

English summary: The Puducherry National Tobacco Control Programme (NTCP) held an awareness programme on oral hygiene and anti-tobacco at The Study L’Ecole Internationale school, attended by 116 eighth-grade students and 6 teachers. Doctors and the health team explained the harms of tobacco to the body and teeth, demonstrated brushing using dental models, and distributed posters and leaflets.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன