புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம்
புதுச்சேரி, அக்டோபர் 27: ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதுச்சேரியில் 101வது விஜயதசமி விழா அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்பி செல்வ கணபதி, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்வம் மற்றும் சன்பரிவார் அமைப்புகளைச் சார்ந்த பலர் வெள்ளைச் சட்டை, காக்கி நிறப் பேண்ட் அணிந்து அணிவகுத்துச் சென்றனர். அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் கடற்கரை காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. காவிக் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


