மண்ணாடிப்பட்டு தொகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட பூமிபூஜை போட்ட எம்.எல்.ஏ ராமு
புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பூர்ணாங்குப்பம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.36.96 லட்சம் மதிப்பீட்டில் அரசாணை வெளியிடப்பட்டு, பொதுப்பணித்துறையின் மூலமாக இப்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் ஒப்பந்தப் பணி ரூ.34.29 லட்சத்திற்கு புதுச்சேரியைச் சார்ந்த ஒப்பந்ததாரர் ராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மண்ணாடிப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறையின் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவு கோட்ட செயலாளர் வைத்தியநாதன், உதவி பொறியாளர் சம்பத், இளநிலை பொறியாளர் ஸ்ரீராம் சங்கர், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதிய அங்கன்வாடி மையம் அமைக்கப்படுவதன் மூலமாக அப்பகுதி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நலச்சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.