விமானத்தில் நிர்வாகிகள் கைது: டெல்லி காவல் ஆணையருக்கு காக்ரோச் ஜனதா கட்சி அவசர கடிதம்

புதுச்சேரி, 11/10/2026: மும்பையிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் வைத்து தங்கள் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் டெல்லி காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டு 12 மணி நேரத்திற்கும் மேலாக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அமைப்பின் அமைப்புச் செயலாளர் அஜிங்க்யா ஷிண்டே, டெல்லி காவல்துறை ஆணையருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் விமானத்திற்குள்ளேயே காவலில் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் இதுவரை குடும்பத்தினருக்கோ அல்லது வழக்கறிஞர்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளை மீறி சட்டவிரோதமாக நபர்களைத் தொடர்பு எல்லைக்கு அப்பால் அடைத்து வைப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் அல்லது சட்டப்பூர்வ தகவல் அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English summary: The Cockroach Janata Party alleged that its coordinator Abhijeet Dipke and co-coordinators Saurav Das and Ashutosh Ranka were taken into custody by Delhi Police on a flight from Mumbai to Delhi and held for over 12 hours without their whereabouts being disclosed. Organising secretary Ajinkya Shinde wrote to the Delhi Police Commissioner demanding their release or legal information. These are the organisation’s allegations as reported, with no police response given.


