புதுச்சேரியில் முதியோர் ஓய்வூதிய வயதை 50 ஆக குறைக்க வேண்டும்: சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கோரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி வயது வரம்பை 55-லிருந்து 50 ஆகக் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்ற நிகழ்வின் போது பேசிய அவர், தற்காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள், தீவிர சர்க்கரை நோய் மற்றும் மதுப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைந்த வயதிலேயே கடுமையான உடல்நலக் குறைபாடுகளும் அகால மரணங்களும் ஏற்படுகின்றன என்று கவலை தெரிவித்தார்.
இத்தகைய சூழலில், நலிவடைந்த எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் மாதாந்திர மருத்துவ மற்றும் அத்தியாவசியத் தேவைகளை ஈடுசெய்யவும் உதவும் வகையில், ஓய்வூதிய வயது வரம்பை 50 ஆகத் தளர்த்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
English summary: Congress MLA Karthikeyan asked in the Puducherry Assembly that the eligibility age for old-age pension be lowered from 55 to 50. He said lifestyle changes, severe diabetes and drinking cause serious health problems at younger ages, and urged the government to act quickly to help vulnerable people.

