புதுச்சேரி

ஸ்ரீ அரவிந்தரின் 154-வது அவதார தின விழா: ஆரோவில் மாத்ரிமந்திரில் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில்லில், ஸ்ரீ அரவிந்தரின் 154-வது அவதார தின விழாவை முன்னிட்டு பல்வேறு ஆன்மீக மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆரோவில் மாத்ரிமந்திர் ஆம்பிதியேட்டரில் கிருபா ரவி வழங்கும் “விமர்சா – பிரகாசா: தி அவேக்கனிங்” (Vimarsa – Prakāśa: The Awakening) என்ற சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த பிரத்யேக நாட்டிய நிகழ்ச்சி, மனிதனின் உள் விழிப்புணர்விலிருந்து ஆன்மீகப் பிரகாசத்தை நோக்கிய பயணத்தை பாரம்பரிய நடனக் கலையின் மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. மாத்ரிமந்திரின் அமைதியான மற்றும் தெய்வீகச் சூழலில் நடைபெறும் இந்த நிகழ்வில், நடன அசைவுகள், முகபாவனைகள் மற்றும் பக்தி ஆகியவற்றை ஒன்றிணைத்து இறைவனுக்கு ஒரு உன்னத அர்ப்பணிப்பாக இந்த நாட்டியம் வடிமைக்கப்பட்டுள்ளது.

நடனத்தை வெறும் கலையாக மட்டுமின்றி, ஆழ்ந்த தியானம், ஆன்மீக அர்ப்பணிப்பு மற்றும் உள்நோக்கிய தேடலுக்கான ஒரு முக்கிய கருவியாக மாற்றுவதே இந்த கலைநிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும். ஸ்ரீ அரவிந்தரின் உருமாற்ற சிந்தனைகளையும் அவரது ஆன்மீகப் பார்வையையும் கொண்டாடும் வகையிலும், பார்வையாளர்களிடையே ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அமையவுள்ளது என ஆரோவில் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன