புதுச்சேரி

காரைக்காலில் தர்மபுர ஆதீனம் சார்பில் இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

காரைக்கால், அக்டோபர் 27: காரைக்கால் மாவட்ட இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் வகையில், தர்மபுர ஆதீனம் சார்பில் புதுச்சேரி அரசுப் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருநல்லாறு தர்மபுர ஆதீன கட்டளை மட வளாகத்தில் உள்ள தருமை ஆதீனம் கேரியர் அகாடமி மற்றும் சென்னை அறம் ஐஏஎஸ் அகாடமி இணைந்து இந்த இலவச பயிற்சி வகுப்புகளைத் துவக்கியுள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் நாளிலேயே ஆர்வமாகப் பயிற்சி வகுப்பில் இணைந்துகொண்டனர்.

மாணவர்களின் ஆர்வம் காரணமாக, கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் பணியில் இருக்கும் நபர்களுக்கும் ஏதுவாக மாலைநேர வகுப்புகளும் விரைவில் தொடங்கப்படும் என தர்மபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன