புதுச்சேரி
புதுச்சேரி கடற்கரையில் தவறி விழுந்த செல்போனை மீட்டு சுற்றுலா பயணிகளிடம் வழங்கிய லைப்கார்டுகள்
புதுச்சேரி, அக்டோபர் 27: தெலுங்கானாவில் இருந்து பத்து பேர் கொண்ட கல்லூரி மாணவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அப்பொழுது அவர்கள் காந்தி சிலை அருகில் கடற்கரையில் பாறை மேல் நின்று விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்களின் மொபைல் போன் தவறி பாறைக்குள் விழுந்தது.
அப்பொழுது அங்கு கடற்கரை பாதுகாப்பில் இருந்த லைப்கார்டுகளான ரமேஷ், விக்ரம், சுந்தர் மற்றும் பிரவீண்ராஜ் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து பாறை இடையில் மாட்டிக்கொண்ட மொபைல் போனை இரண்டு மணி நேரம் போராடி எடுத்தனர். அதன் பின்னர் அந்த மொபைல் போன் சுற்றுலா பயணிகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
