தட்டாஞ்சாவடி லட்சுமி நகர் பகுதி அடிப்படை வசதிகள்: எம்.எல்.ஏ. அசோக் ஆனந்திடம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நேரில் கோரிக்கை!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட லட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தை நேரில் சந்தித்து அப்பகுதி சார்ந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி பாரி நகரில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. லட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் திரளாகக் கலந்து கொண்டு, தொகுதி மேம்பாடு குறித்து சட்டமன்ற உறுப்பினருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.
சமீபத்திய மழைக்காலங்களின் போது லட்சுமி நகர் பகுதியில் மழைநீர் குடியிருப்புப் பகுதிகளில் தேங்காத வண்ணம் விரைவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்துக்கு தங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, லட்சுமி நகர் குடியிருப்புப் பகுதியில் தரமான தார்ச்சாலை வசதி அமைத்தல், கழிவுநீர் வாய்க்கால் புனரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகளை மேலும் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என நிர்வாகிகள் அவரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த், லட்சுமி நகர் பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் விரைவாகப் பூர்த்தி செய்யப்படும் என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆலோசித்து உரிய களப்பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
English summary: Office-bearers of the Lakshmi Nagar Residents Welfare Association in the Thattanchavady constituency of Puducherry met MLA Ashok Anand at his Bari Nagar office. They thanked him for quick steps to prevent rainwater stagnation during the recent rains, and petitioned for a good tar road, repair of the sewage drain and expanded rainwater drains. The MLA assured them the needs would be met quickly after consulting the officials concerned.
