தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: தொண்டர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கி வாழ்த்து!

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு. N.ஆனந்த் MLA தலைமை தாங்கி, நிர்வாகிகளுக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மற்றும் களப்பணியாற்றும் தொண்டர்களுக்கு தீபாவளி சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர்களுக்குத் தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துகளை அமைச்சர் N.ஆனந்த் அன்போடு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அடிமட்ட அளவில் கழகத்தின் கட்டமைப்புப் பணிகளை வலுப்படுத்துவது, பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் கேட்டறிந்து மக்கள் நலப்பணிகளை முன்னெடுப்பது மற்றும் வரவிருக்கும் களப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. R.விஜய் பரணி பாலாஜி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. தொல்லாமூர் V.கண்ணன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. G.P.சுரேஷ், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. N.மோகன்ராஜ், விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் திரு. A.வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு. S.சக்திவேல், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு. A.நிரஞ்சன், விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளர் திரு. G.சரவணன் உள்ளிட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் திரளான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.