புதுச்சேரி

புதுச்சேரியில் காமராசர் மணிமண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்ற யூனியன் பிரதேச உதயநாள் விழா

புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி ஆளுநர் மாளிகை சார்பில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய ஐந்து மாநிலங்களின் யூனியன் பிரதேச உதயநாள் விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராசர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

புதுவை பல்கலைக்கழகம், சமுதாய கல்லூரி, ஜிப்மர், மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி, அன்னை தெரேசா செவிலியர் கல்லூரி மற்றும் புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மை பாரத் தன்னார்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், மாநிலங்களின் கலை கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், தலைமைச் செயலர் சரத் சவகான், தலைமை காவல்துறை இயக்குனர் ஷாலினி சிங் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary: The Puducherry Raj Nivas organised a formation-day celebration for five states and Union Territories (Puducherry, Tamil Nadu, Kerala, Jammu and Kashmir, and Ladakh) at the Kamarajar Manimandapam in Karuvadikuppam, with Lieutenant Governor Kailashnathan as chief guest. Students, teachers and MY Bharat volunteers from several institutions took part, and cultural programmes were staged. The Chief Secretary, Director General of Police Shalini Singh and IAS and IPS officers also attended.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன