புதுச்சேரி

புதுச்சேரியில் விநாயகர் கோவிலில் நள்ளிரவில் சுவரேறி குதித்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்

புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி ஊசுட்டூ தொகுதிக்கு உட்பட்ட சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் நள்ளிரவில் சுவரேறி குதித்து மர்மநபர் ஒருவர் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றார்.

சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் பூஜைகள் முடிந்தபின் நிர்வாகிகள் கோவிலை பூட்டிவிட்டுச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் கோவிலின் சுற்றுசுவரை ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்மநபர், மின் இணைப்பை துண்டித்துவிட்டு அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளார். காலை கோவிலை திறக்க வந்த நிர்வாகிகள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளில் மர்மநபர் சுவரேறி குதித்து மின் இணைப்பை துண்டித்துவிட்டு உண்டியலை உடைத்து திருடும் காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், போலீசார் அந்த மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Check Also
Close