புதுச்சேரி ஜிப்மரில் சீனியர் ரெசிடென்ட் மருத்துவர் பணியிடங்கள்: மாத ஊதியம் ரூ.1.28 லட்சம் – நேர்காணல் விவரம்!

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் ஜிப்மர் (JIPMER) மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் ரெசிடென்ட் (Senior Resident) பணியிடங்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி மொத்தம் 9 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. துறை வாரியாக, நரம்பியல் (Neurology) – 2, நரம்பியல் அறுவை சிகிச்சை (Neurosurgery) – 1, மகப்பேறியல் மற்றும் மகளிர் நலம் (Obstetrics & Gynaecology) – 2, நோயியல் (Pathology) – 1, ரேடியோ டயக்னாசிஸ் (Radiodiagnosis) – 2 மற்றும் இரத்த மாற்று மருத்துவம் (Transfusion Medicine) – 1 என பணியிடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ஒருங்கிணைந்த தொகுப்பூதியமாக ரூ.1,28,359 வழங்கப்படும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த மருத்துவர்கள் தொடர்புடைய மருத்துவத் துறையில் முதுகலை மருத்துவப் பட்டம் (MD/MS/DNB) பெற்றிருக்க வேண்டும். நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை துறைகளுக்கு தேவையான கூடுதல் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 2026 நவம்பர் 16-ஆம் தேதியின்படி அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
இதற்கான ஆன்லைன் பதிவு நவம்பர் 2, 2026 அன்று காலை 11:00 மணிக்குத் தொடங்கி, நவம்பர் 16, 2026 அன்று மாலை 4:30 மணியுடன் நிறைவடைகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரடி நேர்காணல் (Walk-in Interview) நவம்பர் 18, 2026 அன்று காலை 7:00 மணிக்கு புதுச்சேரி ஜிப்மர் வளாக நிர்வாகக் கட்டிடத்தின் 5-வது மாடியில் உள்ள டெலிமெடிசின் அறையில் (IT Wing) நடைபெறும்.
நேர்காணல் செயல்திறன் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் நவம்பர் 16-க்குள் தேவையான கல்வித்தகுதிகளை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்திற்கு www.jipmer.edu.in இணையதளத்தை அணுகலாம். சந்தேகங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 0413-2296022 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.