புதுச்சேரி

லண்டனில் சுற்றுலாத்துறை தொழில் பங்குதாரர்களுடன் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை

புதுச்சேரி, நவம்பர் 7: லண்டனில் நடைபெற்றுவரும் உலக சுற்றுலா சந்தை மாநாட்டில் பங்கேற்றுள்ள புதுச்சேரி பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், லண்டனை சேர்ந்த சுற்றுலாத்துறை தொழில் பங்குதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் புதுச்சேரியின் சுற்றுலா துறையை சர்வதேச அளவில் மேம்படுத்துவது குறித்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் லண்டன் பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து புதுச்சேரியில் சுற்றுலா துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன