காரைக்கால்

நிரவி–திருப்பட்டினம் தொகுதி பயனாளிகள் 6 பேருக்கு ₹1.25 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் ரங்கசாமியிடம் காசோலைகளைப் பெற்றார் எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம்

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்டம் நிரவி–திருப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளுக்கான காசோலைகளை, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முதலமைச்சர் என். ரங்கசாமியிடம் இருந்து முறைப்படி பெற்றுக்கொண்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. TKSM மீனாட்சிசுந்தரம் அவர்கள் முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தனது தொகுதிக்குட்பட்ட ஏழை எளிய மக்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்வாதார தேவைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதியைக் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, அவசரத் தேவை மற்றும் சிகிச்சைகளுக்காக விண்ணப்பித்திருந்த நிரவி–திருப்பட்டினம் தொகுதியைச் சேர்ந்த 6 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ₹1.25 லட்சம் நிவாரண உதவித்தொகை உடனடியாக ஒப்பளிக்கப்பட்டு அதற்கான காசோலைகள் தயார் செய்யப்பட்டன. அந்த காசோலைகளை முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி வழங்க, சட்டமன்ற உறுப்பினர் திரு. TKSM மீனாட்சிசுந்தரம் பயனாளிகளின் சார்பில் பெற்றுக்கொண்டார்.

காரைக்கால் பிராந்திய மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு, உரிய நேரத்தில் நிவாரண உதவி வழங்கி உத்தரவிட்டதற்காக முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்களுக்கு தொகுதி மக்கள் சார்பாக எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இத்தொகை பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது.

புதுச்சேரி மட்டுமின்றி காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட அனைத்துப் பிராந்தியங்களிலும் உள்ள நலிவடைந்த மக்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி மூலம் தொடர்ந்து பல்வேறு அவசர மருத்துவ மற்றும் நிதி உதவிகள் அரசால் துரிதமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன