தமிழ்நாடு

தேனி சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் எஞ்சிய இருவரை கைது செய்தது காவல்துறை

தேனி, அக்டோபர் 28: தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் தலைமறைவாக இருந்த எஞ்சிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த சகோதரர்களான திருப்பதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே, சிறைகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை உயர் கோபுரங்களில் கண்காணிப்பில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கைதிகள் தப்பிக்கும் போது தேவையின் அடிப்படையில் ஆயுதங்களை பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன