தமிழ்நாடு

ஆறுகளில் நுரை பொங்குவதற்கு மக்கள் பயன்படுத்தும் சோப்பு ஷாம்புதான் காரணம் என அமைச்சர் ராஜீவ் பேச்சு

சென்னை, அக்டோபர் 28: ஆறுகளில் நுரை பொங்குவதற்குத் தொழிற்சாலைக் கழிவுகள் காரணமல்லாமல், மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புதான் காரணம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், குளியலறை கழிவுநீர் மற்றும் சோப்புப் பொருட்கள் உயரமான இடத்திலிருந்து விழும்போது இந்த நுரை ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார். ஆறுகளில் நுரை ஏற்படுவதற்குத் தொழிற்சாலைக் கழிவுகள் காரணமல்ல என கடந்த 2020ஆம் ஆண்டே ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆற்றல் வரும் நுரை உலக மகா கண்டுபிடிப்பு என்றும், இந்த அமைச்சருக்கு நோபல் பரிசுதான் தர வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலாக விமர்சித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன