சென்னையில் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவீன ஆய்வகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, அக்டோபர் 28: சென்னையில் உள்ள கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவீன ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பாராட்டுத் தெரிவித்த அவர், மாணவர்களுடன் கலந்துரையாடி சதுரங்கப் போட்டியும் விளையாடினார். அரசு ஐடிஐ-க்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைக்க அமைச்சர் சி.வி. கணேசன் முன்னிலையில் ஸ்கேனைடர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கிண்டி ஐடிஐ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் உலகத் திறன் பயிற்சி பெறுபவர்களுக்கு பணி நியமன ஆணைகளும், அகில இந்திய தொழிற்தேர்வில் வெற்றி பெற்ற அறுபது பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிண்டியில் சாலை ஓரம் காத்திருந்த மக்களை சந்தித்து உற்சாகமடைந்தார்.