தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றெழுத்த தாழ்வு மண்டலம்: 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என கணிப்பு

சென்னை, அக்டோபர் 31: வங்கக்கடலில் அடுத்த ஆறு மணி நேரத்தில் புதிய காற்றெழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் இரண்டாவது புயல் இதுவாகும். அடுத்ததாக உருவாகும் இந்த புயலுக்கு இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட ‘உரசு’ என்ற பெயர் சூட்டப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன