தமிழ்நாடு
தேனி மாவட்ட சிறை கண்காணிப்பாளர் நாகேஸ்வரன் பணியிடை நீக்கம் – அரசு நடவடிக்கை
சென்னை, அக்டோபர் 31: தேனி மாவட்ட சிறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த நாகேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைகளில் கைதிகள் தப்பியோடும் சம்பவங்களைத் தொடர்ந்து சிறை நிர்வாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணியில் மந்தமாகவோ கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.