தமிழ்நாடு

அதிமுகவில் இணைந்தார் ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளைதுரை: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!

சென்னை, நவ. 01: தமிழக காவல்துறையில் பிரபல ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்பட்ட ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) எஸ். வெள்ளைதுரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மலர்க்கொத்து வழங்கி தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வின்போது அதிமுக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தமிழக காவல் துறையில் பல்வேறு முக்கிய வழக்குகளில் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டு ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என பெயரெடுத்தவர் எஸ்.வெள்ளைதுரை. பணி ஓய்வுக்குப் பின் பொது வாழ்வில் ஈடுபட்ட இவர், கடந்த நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு களம் கண்டார். தற்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இவர் முறைப்படி இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன