லாஸ்பேட்டை பெத்துச்செட்டிப்பேட்டை சிவசுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் புதிய தேர் கரிக்கோள விழா விமரிசை!
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெத்துச்செட்டிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரத் திருத்தேருக்கான கரிக்கோள விழா பக்தி சிரத்தையுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் நடைபெற்றது.
இவ்விழாவில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, விசேஷ யாக பூஜைகளுடன் புதிய திருத்தேருக்கு கரிக்கோள சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலாவுடன் தேர் மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகக் குழுவினர், லாஸ்பேட்டை என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவாகப் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
English summary: A karikolam ceremony for a newly built wooden temple chariot was held at the Arulmigu Sivasubramaniyar Swami Devasthanam in Bethuchettipettai, in the Lawspet constituency of Puducherry. Civil Supplies and Consumer Affairs Minister Sivakolundhu presided. After special pujas, the decorated deity’s chariot was taken around the streets, and devotees were given prasadam.