புதுச்சேரி

திருக்கனூர் பாரதி செவிலியர் கல்லூரி திறப்பு விழா: கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, நவம்பர் 7: புதுவை மாநிலம் மண்ணாடிப்பட்டு கம்யூன் திருக்கண்ணூரில் ஸ்ரீ பாரதி கல்வி குழுமத்தின் சார்பில் பாரதி செவிலியர் கல்லூரியின் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கிவைத்து, புதிய பாரதியார் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் செவிலியர் முதலாம் ஆண்டு வகுப்பறை, கல்லூரி ஆய்வகம் மற்றும் நூலகம் ஆகியவற்றைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இணை நிர்வாகி சுசீலா சம்பத் வரவேற்புரையாற்றினார். நிர்வாக இயக்குனர்கள் ஹரீஷ்குமார், மோகன்குமார் முன்னிலை வகித்தனர். மேலும் மணவெளி சட்டமன்ற உறுப்பினர் ராமு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி. ரமேஷ், ஐ.எம்.இ.டி. மருத்துவமனை நிறுவனர் ரமேஷ், காரைக்கால் காங்கிரஸ் பிரமுகர் சந்திரமோகன் மற்றும் திருக்கனூர் ஊர் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவின் முடிவில் கல்லூரி முதல்வர் சங்கீதா நன்றி கூறினார்.

முன்னதாக கடந்த நவம்பர் 4 ஆம் தேதி திருக்கனூரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பாரதி செவிலியர் கல்லூரியின் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் ஏ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கல்லூரியைத் திறந்து வைத்தார். மேலும் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலையையும் அவர் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன