தமிழ்நாடு

தீபாவளியையொட்டி ஈரோடு ஜவுளி சந்தையில் விடிய விடிய விறுவிறுப்பான வியாபாரம்

ஈரோடு, அக்டோபர் 27: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து ஈரோடு ஜவுளி சந்தையில் விடிய விடிய விறுவிறுப்பான வியாபாரம் நடைபெற்றது.

ஈரோட்டில் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி வாரச்சந்தை நடைபெறும். இங்கு திருப்பூர், சேலம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநில வியாபாரிகளும் அதிகளவு மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம். தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை சூடுபிடித்துள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த சிறு வியாபாரிகள் ஏராளமானோர் தேவையான ஜவுளி ரகங்களை வாங்கிச் சென்றனர்.

நூல் விலை கிலோவிற்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஜவுளிகளின் விலையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர், ஈரோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஏராளமான ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு முந்தைய திங்கட்கிழமை சந்தையில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன