தேசியம்

கௌஹாத்தியில் தனியார் விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒரே குடும்பத்தினர் உட்பட 5 பேர் கொலை

கௌஹாத்தி, அக்டோபர் 27: அசாம் மாநிலம் கௌஹாத்தியில் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.

கௌஹாத்தி நகரின் உலுபரி அருகே போரா சர்வீஸ் பகுதியில் ஹெலனா பராலி என்பவருக்கு சொந்தமான தங்கும் விடுதியை கனகாந்த கோகாய் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். விடுதி குத்தகை விவகாரம் தொடர்பாக கனகாந்த கோகாய் மற்றும் விடுதி உரிமையாளர் ஹெலனா பராலி இடையே பிரச்சனை இருந்து வந்த நிலையில், நேற்றிரவு விடுதி உரிமையாளர் ஹெலனா பராலி, அவரது மகன் தேவர்ஷி கஷ்யாப் உள்ளிட்ட ஆறு பேர் விடுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த குத்தகைக்காரர் கனகாந்த கோகாய் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஹெலனா பராலி, அவரது மகன் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் கார் ஓட்டுனர் நாராயண தாஸ் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயம்டைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக கௌஹாத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன