விளையானூர் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி, நவம்பர் 7: விளையானூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா விளையானூர் கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், மாணவர்களின் நலனுக்காக புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரியில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறு மாத இலவச அரிசிக்கு பதிலாக தலா ரூ.5,160 அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவகுமார், விளையானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார், முன்னாள் சேர்மன் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.