தமிழ்நாடு

மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் விஜய்

சென்னை, அக்டோபர் 20: மதுராந்தகம் தொகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

அச்சரப்பாக்கத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் மதுராந்தகம் ஏரியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு, அறிவுசார் மையம், பெண்களுக்கான தங்கும் விடுதி மற்றும் வாரச்சந்தை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாராபுரம் தொகுதியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச வீட்டுமனை பட்டாக்கள், நீர்தேக்க தொட்டிகள் மற்றும் புதிய தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன