கடலூரில் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சேவாரத்னா தேசிய விருதுகள் வழங்கும் விழா
கடலூர், அக்டோபர் 27: கடலூர் காமராஜர் அரங்கத்தில் தமிழகத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கு பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சேவாரத்னா தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மற்றும் தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில வழக்கறிஞர் அணி தலைவர் டி. கோவிந்தன் தலைமை தாங்கினார். விடியல் சமூக சேவை இயக்குனர் புஷ்ப சௌரிராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாநில தலைமை நிலைய செயலாளர் அ.ஸ்ரீ. ராகுல், கடலூர் மாவட்ட செயலாளர் ஆர். ஆறுமுகம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநில தலைவரும் தேசிய தலித் கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான ஆத ஸ்ரீ ரங்கன் பிரகாஷ் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தமிழ் மாநில செயலாளர் மூத்த வழக்கறிஞர் ஏ.எஸ். சந்திரசேகரன் ஆகியோர் சிறந்த சமூக சேவை புரிந்தோருக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சேவாரத்னா தேசிய விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வழங்கினர்.
விழாவில் புதுவை மாநில தலைவர் கே.கே.என். கலியமூர்த்தி, கடலூர் மாவட்ட அமைப்பாளர் ஜே.ஆர். ஜெயச்சந்திரன், ஏ.ஆர்.எல்.எஃப் மாநில செயல் தலைவர் எஸ். தமிழ் இலக்கியா, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு விருதாளர்களை வாழ்த்திப் பேசினர். நிறைவாக ஏ.ஆர்.பி.ஐ கட்சி கடலூர் மாநகர தலைவர் கே.கே. புஷ்பநாதன் நன்றி கூறினார்.

