புதுச்சேரியில் கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் அவதி
புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரியில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8:30 மணி வரை 6.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
முரசு புயல் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில், இன்று அதிகாலை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் குடைகளைப் பிடித்தபடியும் பலர் நனைந்தவாறும் பள்ளிகளுக்கு சென்றனர். தொடர் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
English summary: Puducherry recorded 6.5 cm of rain in the 24 hours from 8:30 am on the previous day to 8:30 am on November 3. Cyclone Murasu brought heavy rain from midnight, followed by light to moderate rain in many areas early in the morning. Rainwater collected on roads and disrupted normal life, and as no holiday was declared for schools, students went to school with umbrellas or got drenched.

