தமிழ்நாடு

அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க OMCL முகமையாக நியமனம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை, அக். 21:

தமிழ்நாடு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமுகமை (Outsourcing) அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் முக்கிய முகமையாக சென்னை வெளிநாட்டு மனிதவளக் கழகம் (Overseas Manpower Corporation Limited – OMCL) நியமிக்கப்பட்டு தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில் (G.O. Ms. No. 225), தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள் வெளிப்படைத்தன்மை சட்டம் 1998-ன் பிரிவு 3(3)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசுத் துறைகள், மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற அரசு அமைப்புகளுக்குத் தேவைப்படும் மனிதவளத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முகமையாக சென்னை ஓ.எம்.சி.எல் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது என ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அரசாணையில் விவரிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்துவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், தகுதியான ஆட்களை முறையான வழிமுறைகளில் பணியமர்த்தவும் இந்த ஆணை முக்கிய வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary: The Tamil Nadu government has named the Overseas Manpower Corporation Limited (OMCL), Chennai, as the agency to recruit outsourced and contract staff for government departments and public sector undertakings. The order, G.O. Ms. No. 225, was issued by Additional Chief Secretary (Finance) M.A. Siddique under Section 3(3) of the Tamil Nadu Transparency in Tenders Act, 1998, and is expected to bring transparency to such hiring.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன