புதுச்சேரி
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கைது கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, அக்டோபர் 27: தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் கோவை கார்த்திகா, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவானன் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி மாநில தலைவர் ஞானபிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள், பாசரை மற்றும் தொகுதி நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்பொழுது தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு ஆதரவாக கட்சியினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


