புதுச்சேரியில் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை ஒட்டி இரண்டு நாட்களில் 800 டன் குப்பைகள் அகற்றம்
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரியில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்களை ஒட்டி நகரப் பகுதியில் தேங்கிய 810 டன் குப்பைகள் நகராட்சி சார்பில் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் ஆயுத பூஜை விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டதை அடுத்து வீடுகள், வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். விழாவின் போது திருஷ்டிக்காக சாலையில் வெண்பூசணிக்காய்கள் உடைக்கப்பட்டதால் வாழை கன்றுகள், கயிறுகள் மற்றும் தற்காலிக கடைகளின் கழிவுகள் ஆங்காங்கே தேங்கின. இதனை அகற்றும் பணியில் தனியார் ஒப்பந்த துப்புறவு தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த அக்டோபர் 19ஆம் தேதி 450 டன் குப்பைகளும், அக்டோபர் 20ஆம் தேதி 360 டன் குப்பைகளும் என கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் 810 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 250 டன் குப்பைகள் மட்டுமே அகற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
English summary: Puducherry municipal officials said 810 tonnes of garbage accumulated during Ayudha Puja and Vijayadasami celebrations were cleared from the town. They said 450 tonnes were removed on 19 October and 360 tonnes on 20 October, against a usual daily average of about 250 tonnes, with private contract sanitation workers deployed day and night. The garbage included broken white pumpkins, banana saplings, ropes and waste from temporary shops.
