புதுச்சேரி பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் வரும் 15-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்
புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் 15-ம் தேதி குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கில், அப்பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தூய்மைப்படுத்துதல் மற்றும் அவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, கிருமாம்பாக்கம் மற்றும் பிள்ளையார்குப்பம் ஆகிய பகுதிகளில் வரும் 15-ம் தேதி குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்துக்கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பராமரிப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மீண்டும் வழக்கம்போல் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.