புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் நீட் மருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கலந்தாய்வு: விருப்பப் பதிவு மற்றும் கட்டண விவரங்கள் வெளியீடு!

புதுச்சேரி, 08/09/2026:
புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் சென்டாக் (CENTAC) மாணவர் சேர்க்கை குழு, இளநிலை நீட் (UG NEET) மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS), பிஏஎம்எஸ் (BAMS – ஆயுர்வேதா) மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பு (B.V.Sc.&A.H.) ஆகியவற்றுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான பதிவுக் கட்டணம் செலுத்துதல் மற்றும் பாடப்பிரிவு முன்னுரிமைப் பதிவு (Course Preferences) ஆகியவை செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 5:00 மணி வரை இணையதளம் வழியாக மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவர்கள் (சேர்ந்தவர்கள்/சேராதவர்கள் உட்பட) சென்டாக்கில் பதிவு செய்துள்ள அனைத்து மாணவர்களும் இந்த 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

முதல் சுற்றில் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், அபராதக் கட்டணம் இன்றி (Without Forfeiture Fee) தங்களது இடத்தை ராஜினாமா செய்ய விரும்பினால், தகவல் கையேட்டில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து, தங்களின் லாகின் டேஷ்போர்டு (Login Dashboard) வழியாக வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குப் பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி உள்ளிட்ட பிரிவினர் ரூ.10,000/-ம், எஸ்சி/எஸ்டி/இபிசி மற்றும் அரசுப் பள்ளி ஒதுக்கீட்டுப் பிரிவினர் ரூ.5,000/-ம் பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேனேஜ்மென்ட் மற்றும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2,00,000/- பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் (குறிப்பிட்ட சில பிரிவினர் தவிர) கூடுதல் கட்டணமின்றி இரண்டாம் சுற்றில் பங்கேற்கலாம் என்றும் சென்டாக் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன